அருவியூர் வடக்குவளவு நகரத்தார்

அருவியூர் வடக்குவளவு நகரத்தார் Aruviyur Vadakkuvalavu Nagarathar Kalvi Valarchikkazhagam - Head quarters: Piranmalai, - 630 502. Admin Office: No. 3 1st cross street, Alagappa complex backside, Ponnamaravathi - 622 407, Pudukkottai District, Tamil Nadu.

News

செட்டியார் வகைகள் -இணயதள பக்கங்களில் கிடைத்த தகவல்கள்

 

செட்டியார் வகைகள் -இணயதள பக்கங்களில் கிடைத்த தகவல்கள்

      பல்வேறு காரணங்களால் பூம்புகாரை விட்டு வெளியேறி தமிழகம் முழுவதும் சென்ற செட்டியார்கள் எந்த ஊரில் ஆரம்பத்தில் தங்கினார்களோ அந்த ஊரின் பெயர்களை விட மனம் இல்லாமல் அந்த ஊரின் பெயராலேயே தங்களை அடையாளம் காட்டி கொள்வதோடு மட்டுமல்லாமல் அந்த ஊரின் பெயராலேயே சங்கம் அமைத்து நாட்காட்டி அடித்து விநியோகித்து வாழ்ந்து வருகிறார்கள் உதாரணம்

 

     1.ஏழூர் செட்டியார் (கன்னியாகுமரி )

     2.சோழபுரம் செட்டியார் (தஞ்சை,திருச்சி )

     3.அருவியூர் வடக்குவளவு நகரத்தார்

     4.எம்மாம் பூண்டி ஐநூத்தாஞ் செட்டியார்

 

     தமிழகத்தில் வாழும் பூம்புகார் வரலாறு கொண்டு ஒரே மாதிரியான கலாச்சார பழக்க வழக்கங்களை உடைய தமிழ் பேசும் செட்டியார்கள் கீழ்க்கண்ட பெரும் பிரிவுகளில் உள்ளனர்

 

     1 ஆயிரம் வைசியர் (1000 கோத்திரங்களை கொண்டதால் 1000 வைசியர்கள்=செட்டியார்கள் என்ற விளக்கம் உள்ளது .1000 வைசியர்கள் தமிழகம் முழுவதும் 18 பிரிவுகளில் உள்ளனர் அதில் பெரும்பாலான பிரிவுகள் ஊரின் பெயராலேயே அமைந்துள்ளன

          1.அச்சிரபாக்கம் செட்டியார்

          2. சமயபுரம் செட்டியார்

          3,மஞ்சபுத்தூர் செட்டியார்

 

     2.கொங்கு செட்டியார்கள் பூம்புகாரில் ஐந்நூற்றுவர் குழுவாக வாழ்ந்த செட்டியார்கள் கொங்கு நாட்டில் குடியேறி வாழ்ந்ததால் அவர்கள் ஐநூற்று கொங்கு செட்டியார்கள் அல்லது கொங்கு செட்டியார்கள் என்று அழைக்க படுகின்றனர் இங்கும் ஊர் இணைப்பு உண்டு

          1.காடாம்பாடி கொங்கு செட்டியார்

          2.எம்மாம்பூண்டி கொங்கு செட்டியார்

          3.அன்னூர் கொங்கு செட்டியார்

          4.ஈரோடு கொங்கு செட்டியார்

          5.தாயம்பாளையம் கொங்கு செட்டியார்

 

     3.வெள்ளாஞ் செட்டியார்கள் 65 பிரிவுகளாக உள்ளனர் .அதில் பெரும்பாலான பிரிவினர் ஊர்கள் இணைப்பை பெற்றுள்ளனர்

          1.அகரம் வெள்ளான் செட்டியார்

          2.அல்லித்துறை நகரத்தார் வெள்ளான் செட்டியார்

          3.உலகமாபுரம் வெள்ளான் செட்டியார்

          4.வல்லம் வெள்ளான் செட்டியார்

          5.விராலூர் நகரத்தார் வெள்ளான் செட்டியார்

          6.ஏம்பல் , பெரியகோட்டை சித்தக்கூர் நகரத்தார் வெள்ளான் செட்டியார்

          7.பூவைமாநகர் வெள்ளான் செட்டியார்

          8.சுப்ரமணியபுரம் வெள்ளான் செட்டியார்

 

 

 

      ** தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு

          1.அந்தணர்

          2. வணிகர்

          3.வேளாளர்

          4 சூத்திரர்

      ஆகிய 4 இனங்கள் மட்டுமே இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் இன்று தமிழ் நாட்டில் 1000 க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. மேற்படி 1000 இல் செட்டியார் என்பது 1 என்ற மதிப்புதான் செட்டியார்கள் என்று எடுத்து கொண்டால் அதில் 1000 க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன கவேரிபூம்பட்டினம்தான் தங்களது பூர்வீகம் என்று தமிழ் மொழி பேசும் செட்டியார்களிலையே 1000 பிரிவுகள் உள்ளன

 

      தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவி தொடர்பின்றி வாழ்ந்து வரும் பூம்புகார் வரலாறு கொண்ட தமிழ் செட்டியார்களின் தொகுப்பு :

 

      1.அகரம்2.அள்ளிதுறை நகரத்தார் 3.64.மனை (24 மனை அல்ல ) 4.எழுர் 4. கங்கை குல வைசிய 4. பூவத்தாகுடி 5. சைவ 6.கந்தபொடி 7 . வெண்பாவு நூல்காரர் 8. வைகை 9. கொங்கு 10 கத்தபட்டு நகரத்தார் 11. எருக்கமேனிபட்டி 12. சுந்தரம் நகரத்தார் 13 சோழபுரம் 14 சங்குமுக பாண்டியர் 15. வல்லத்திரா கோட்டை 16 பாப்பா நாடு நகரத்தார் 17 ஏம்பல் நகரத்தார் 18. விராலூர் நகரத்தார் 19 ,அரிவியூர் வடக்கு வளவு நகரத்தார் 20 அரிவியூர் தெற்கு வளவு நகரத்தார் ...........

 

 

 

      ** வெள்ளாஞ்செட்டியார் பெரும்பாலும் சைவ நெறியில் வாழ்ந்ததால் சைவ செட்டியார்கள் என்ற என்றே பல ஊர்களில் அழைக்க படுகிறார்கள் .பல ஊர்களில் எந்த ஊர்களில் வாழ்கிறார்களோ அந்த ஊரின் பெயராலேயே அழைக்கபடுகிரார்கள்.

 

      வெள்ளான் செட்டியார் போன்று கலாச்சாரம் , பழக்க வழக்கங்கள் உடைய

 

      1..பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தம செட்டியார் (தருமபுரி,சேலம்,நாமக்கல்,கரூர் மாவட்டங்கள் )

 

      2.ஐநூற்றாஞ் செட்டியார் = 500 செட்டியார் = ஐநூற்றுவர் (கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும் )

 

      3.1000 வைசியர் (ஆயிர வைசியர் )

 

 

 

      ** ஒருகாலத்தில் வணிக குல ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காத சூழலில் அவர்கள் வெள்ளாள(வேளார்) குலப் பெண்களை திருமணம் செய்துகொண்டனர். அவ்வகையில் கார்காத்த வெள்ளாளர் பெண்களை மணந்த வணிகர்கள் அரிவைநகரத்தார் எனப்பட்டனர். சோழிய வெள்ளாளர் பெண்களை மணந்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்பட்டனர். காணிய வேளாளப் பெண்களை மணந்தவர்கள் சுந்தர நகரத்தார் எனப்பட்டனர். பெண்களை இவ்வாறு குலம் மாறி எடுத்துக்கொண்டாலும் இவர்கள் அடுத்த வாரிசுகளில் எம்குலப்பெண்களை வெள்ளாளக் குலத்திற்குத் தரமாட்டோம் என்ற உறுதியோடு இவர்கள் அப்போது பெண்கொண்டனர்.

 

      ** செட்டியார்கள் அனைவரும் முதலில்(சிலப்பதிகாரக் காலத்தில்)தனவணிகர் என்றே அழைக்கப் பட்டனர்.

 

      இவர்களே புதிய அரசனின் சிரசில் மணிமுடியைச் சூடும் தனிமதிப்பைக் கொண்டிருந்தனர்.

 

      கோவலனும் கண்ணகியும் தனவணிக மரபைச் சேர்ந்தவர்களே.

 

      பட்டினத்தடிகள் தனவணிகர் மரபில் வந்தவர்.

 

      ஞானசம்பந்தர் உயிரோடு எழுப்பித்த பூம்பாவை தனவணிகர் மரபைச் சேர்ந்தவரே.

 

      காவிரிப்பூம்பட்டனத்தில்(சிலப்பதிகாரக் காலம்) இருந்த தனவணிகர் மரபின் மீது பெருமதிப்புக் கொண்ட பாண்டிய மன்னர்கள் தங்கள் அரசில் உயர்ந்த பண்புள்ள குடிமக்கள் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தனவணிகர்களை தென்னாட்டிற்கு வரவேற்றுக் குடியமர்த்தினர்.

 

      காலப்போக்கில் வணிகர் மரபில் பெண்கள் குறைந்த போது வெள்ளாளர்களில் பெண் எடுத்தனர்.

 

      மேற்சொன்ன அரிவை நகரத்தார் மற்றும் நாட்டுக் கோட்டை நகர்த்தார் பிரிவு அந்த காலகட்டத்தில்தான் ஏற்பட்டது;காரணம் அவர்கள் குடியேறிய பகுதிகள்.

 

      அரிவை பிரிவினர் மதுரைக்கு அருகிலிருந்த அருவியூர் என்ற ஊரில் குடியேறியதால் அருவியூர் நகரத்தார் என்றழைக்கப்பட்டனர்.(பின்னாளில் ஏதோ காரணம் பற்றி இந்த அருவியூர்ப்பட்டனம் முழுக்க எரியூட்டப் பட்டதாக சில தகவல்கள் சொல்கின்றன,அருவியூர் நகரத்தார் பிரான்மலை மற்றும் அதைச் சேரந்த பகுதிகளில் குடியேறினர்.)

 

      நாட்டுக் கோட்டை நகரத்தார் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த கோட்டை அமைந்த 7 ஊர்களில் குடியேறினர்.

 

      தொடக்கத்தில் கடல் கடந்து செல்லக் கூடாது;அசைவம் உண்ணக் கூடாது என்ற இரு கொள்கைகளைக் கடைப் பிடித்த நகரத்தார்களில் கோட்டைப் பகுதியில் குடியேறியவர்கள் இந்த இரண்டையும் மீறியதால் அரிவையூர் மற்றும் நாட்டுக் கோட்டை நகரத்தார் பிரிவு நிரந்தனமானது.

 

      இந்த பிரிவினர்களில் இருந்து வெள்ளாளர்களுடனான தொடர்பை புதிப்பித்துக் கொண்டே வந்த சமுகங்களிலிருந்தே பின்னர் தோன்றிய பல செட்டியார் குலங்கள்-தெலுங்கு,தேவாங்க,கார்காத்த,24 மனை போன்ற பல- வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

No comments